பி.சி.சி.ஐ. ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷனுக்கு இடமில்லை

உள்நாட்டு போட்டிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்த காரணத்தினால் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் மத்திய ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

Update: 2024-02-28 13:23 GMT

image courtesy; PTI

மும்பை,

இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) 2023-24 சீசனுக்கான (அக்டோபர் 1, 2023 முதல் செப்டம்பர் 30, 2024 வரை) மத்திய ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள 30 வீரர்களை அறிவித்துள்ளது.

அதன் முழு விவரம் பின்வருமாறு;-

கிரேடு 'ஏ+'

ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா மற்றும் ஜடேஜா

கிரேடு 'ஏ'

அஸ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ், கே.எல். ராகுல், கில் மற்றும் ஹர்திக் பாண்ட்யா

கிரேடு 'பி'

சூர்யகுமார் யாதவ், ரிஷாப் பண்ட், குல்தீப் யாதவ், அக்சர் படேல் மற்றும் ஜெய்ஸ்வால்.

கிரேடு 'சி'

ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஷர்துல் தாக்கூர், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே.எஸ்.பாரத், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான் மற்றும் ரஜத் படிதார்.

கூடுதலாக, இந்த இடைப்பட்ட காலத்திற்குள் குறைந்தபட்சம் 3 டெஸ்ட் அல்லது 8 ஒருநாள் போட்டிகள் அல்லது 10 டி20 போட்டிகளில் விளையாடும் வீரர்கள், விகித அடிப்படையில் தானாகவே கிரேடில் சேர்க்கப்படுவார்கள். உதாரணமாக, துருவ் ஜூரல் மற்றும் சர்பராஸ் கான், இதுவரை 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளனர், அவர்கள் இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் 5வது டெஸ்டின் பிளேயிங் 11-ல் இடம்பெற்றால், கிரேடு 'சி'-ல் சேர்க்கப்படுவார்கள்.

உள்நாட்டு போட்டிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்த காரணத்தினால் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் மத்திய ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஆகாஷ் தீப், விஜய்குமார் வைஷாக், உம்ரான் மாலிக், யாஷ் தயாள் மற்றும் வித்வத் கவேரப்பா ஆகிய விளையாட்டு வீரர்களுக்கான வேகப்பந்து வீச்சு ஒப்பந்தங்களையும் தேர்வுக் குழு பரிந்துரைத்துள்ளது.

அனைத்து வீரர்களும் தேசிய அணியில் விளையாடத காலங்களில் உள்நாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. பரிந்துரைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்