"மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் தற்போது சிறந்த பேட்ஸ்மேன் பாபர் அசாம்" - விராட் கோலி
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக பாபர் அசாம் உள்ளார்.
புதுடெல்லி,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக பாபர் அசாம் உள்ளார். ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 ஆகிய மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் முதல் 5 இடங்களுக்குள் பாபர் அசாம் உள்ளார்.
இதனிடையே, பாபர் அசாம் "உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்" என்று விராட் கோலி கூறியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் என்று பாராட்டியுள்ளார்.
பாபர் அசாமுடனான சந்திப்பு குறித்து விராட் கோலி கூறுகையில், உலகின் சிறந்த பேட்டர்களில் ஒருவராக பாபர் அசாம் உள்ளார். 2019-ம் ஆண்டு உலகக்கோப்பையில், மான்செஸ்டரில் நடந்த ஆட்டத்திற்குப் பிறகு நான் பாபருடன் நல்ல தொடர்பில் உள்ளேன். மேலும் நாங்கள் இருவரும் கிரிக்கெட்டை பற்றி பேசினோம்.
முதல் நாளிலிருந்தே நான் அவரிடமிருந்து நிறைய மரியாதையை பார்த்தேன். அது மாறவில்லை. உண்மை எதுவாக இருந்தாலும், அவர் உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கலாம். அவர் விளையாடுவதை நான் எப்பொழுதும் பார்த்து மகிழ்வேன். இவ்வாறு கோலி கூறியுள்ளார்.
செப்டம்பர் 2-ம் தேதி கண்டியில் நடைபெறும் ஆசிய கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. மேலும் போட்டியின் சூப்பர் 4 சுற்றிலும் இரு அணிகளும் சந்திக்கலாம். மேலும், அக்டோபர் 14-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போதிலிருந்தே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.