ஆசிய கோப்பை: வங்காளதேச அணியை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

இன்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியா மற்றும் வங்காளதேச அணிகள் மோதின.

Update: 2024-07-26 11:32 GMT

தம்புல்லா,

9-வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (டி20) இலங்கையில் நடந்து வருகிறது. லீக் சுற்று போட்டிகள் முடிந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.இந்நிலையில், இன்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியா மற்றும் வங்காளதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி, முதலில் ஆடிய வங்காளதேச அணி வீராங்கனைகள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு வங்காளதேச அணி 80 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் கேப்டன் நிகர் சுல்தானா பொறுப்புடன் விளையாடி 32 ரன்னில் ஆட்டமிழந்தார்.இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரேணுகா சிங் மற்றும் ராதா யாதவ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 81 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகளாக ஷபாலி வர்மா மற்றும் ஸ்மிரிதி மந்தனா களமிறங்கினர். இருவரும் பொறுப்புடன் ஆடினர். ஸ்மிரிதி மந்தனா சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார்.இறுதியில், இந்திய அணி 11 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 83 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.


Tags:    

மேலும் செய்திகள்