ஆசிய கோப்பை: இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் வங்காளதேசம் பேட்டிங் தேர்வு

டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் ஷகிப் அல்-ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார்;

Update: 2023-08-31 09:23 GMT

Image : ICC tweet 

பல்லகெலே,

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு இந்த முறை ஆசிய கோப்பை 50 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது.

இதன்படி இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. அதில் நேபாள அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றியோடு தொடங்கியது.

இந்நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பல்லகெலேயில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் 2-வது லீக்கில் நடப்பு சாம்பியன் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி, ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேசத்தை சந்திக்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் ஷகிப் அல்-ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.அதன்படி வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது

வங்காளதேச அணி :

முகமது நைம், தன்சித் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, தௌஹித் ஹிரிடோய், ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹசன் மிராஸ், மஹேதி ஹசன், தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான்.

இலங்கை அணி :

பதும் நிஸ்ஸங்கா , திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரமா , சரித் அசலங்கா , தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனகா, துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷனா , கசுன் ராஜித, மதீஷ பத்திரன

Tags:    

மேலும் செய்திகள்