தொடக்க வீரராக களமிறங்கிய அஸ்வின்..! இது தான் காரணம் .... விளக்கம் அளித்த சஞ்சு சாம்சன்.!
அஸ்வின் தொடக்க வீரராக களம் இறங்கியதற்கான காரணம் குறித்து கேப்டன் சஞ்சு சாம்சன் விளக்கம் அளித்துள்ளார்
கவுகாத்தி,
ஐபிஎல் 2023 சீசனில் 8-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 20 ஓவரில் 197 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி வெற்றிக்கு அருகில் சென்ற எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் ஆச்சரியமான விஷயமாக ராஜஸ்தான் ராயல் அணியின் தொடக்க வீரராக வழக்கமாக களமிறங்கும் ஜாஸ் பட்லர் இறங்கவில்லை. அவருக்கு பதில் அணியின் ஆல் ரவுண்டர் அஸ்வின் களமிறங்கினார். அனால்அவர் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.
மேலும், அஸ்வின் தொடக்க வீரராக களம் இறங்கியதற்கான காரணம் குறித்து கேப்டன் சஞ்சு சாம்சன் விளக்கம் அளித்துள்ளார்,.
இது குறித்து அவர் கூறியதாவது ,
பட்லர் முழு உடல் தகுதியுடன் இல்லை. காயத்தால் அவர் விரலில் தையல் போடப்பட்டிருந்ததுதொடக்க வீரராக பட்லருக்கு பதில் படிக்கலை களமிறக்கலாமா என ஆலோசித்தோம். ஆனால், பஞ்சாப் அணியில் ராகுல் சஹர் மற்றும் சிக்கந்தர் ராசா என்று இரு ஸ்பின்னர்கள் இருந்ததால் அந்தத் திட்டத்தை செயல்படுத்தவில்லை" என கூறியுள்ளார்.