ஆஷஸ் தொடர்: காயம் காரணமாக நட்சத்திர பேட்ஸ்மேன் விலகல் - இங்கிலாந்துக்கு பின்னடைவு...!

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வரும் 6ம் தேதி தொடங்க உள்ளது.

Update: 2023-07-04 12:47 GMT

Image Courtesy: @ICC

லண்டன்,

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இதுவரை 2 போட்டிகள் முடிந்துள்ளன. அந்த 2 போட்டியில்லும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னைலையில் உள்ளது.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வரும் 6ம் தேதி தொடங்க உள்ளது. மீதமுள்ள டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது. அதில் காயமடைந்த நாதன் லயன் மட்டும் இடம் பெறவில்லை.

இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. அதில் முதல் இரண்டு போட்டிகளுக்கான அணியில் இடம் பிடித்த வீரர்கள் அப்படியே இடம் பிடித்தனர்.

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாக எஞ்சியுள்ள டெஸ்ட் தொடர்களில் இருந்து அந்த அணியின் துணை கேப்டன் ஓலி போப் காயம் காரணமாக விலகி உள்ளார். முதலில் அணியில் இடம் பிடித்த அவர் காயம் காரணமாக தற்போது விலகி உள்ளார். அவருக்கு பதிலாக டேன் லாரன்ஸ் அணியில் இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது



Tags:    

மேலும் செய்திகள்