டோனிக்கு சாக்லெட் வழங்கிய விமானப்பணிப்பெண் - சமூகவலைதளத்தில் பரவும் வைரல் வீடியோ
விமானத்தில் டோனி பயணித்த நிலையில் அவருக்கு விமானப்பணிப்பெண் சாக்லெட் வழங்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
ராஞ்சி,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்/கேப்டனுமான டோனி தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வென்றது.
இந்நிலையில், டோனி தனது மனைவுயுடன் இன்று இண்டிகோ விமானத்தில் பயணித்துள்ளார். அப்போது அவருக்கு விமானப்பணிப்பெண் சாக்லெட் கொடுத்துள்ளார். இதை வாங்கிக்கொண்ட டோனி அவருக்கு நன்றி தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.
அந்த வீடியோவில் டோனி தனது டேப்லெட்டில் கெண்டிகிரஷ் கேம் விளையாடிக்கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து கெண்டிகிரஷ் கேம் விளையாட்டும் சமூகவலைதளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.