2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க முடிவு..!

2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது.

Update: 2023-10-10 00:02 GMT

கோப்புப்படம்

லண்டன்,

உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியான ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. 1900-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் மட்டும் கிரிக்கெட் இடம் பிடித்தது. அதன் பிறகு கழற்றிவிடப்பட்ட கிரிக்கெட்டை மீண்டும் கொண்டு வர எடுக்கப்பட்ட நூற்றாண்டு கால முயற்சி ஒரு வழியாக வெற்றியின் விளிம்புக்கு வந்துள்ளது.

2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கிறது. இந்த ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது. அந்த பரிந்துரை பட்டியலில் பிளாக் கால்பந்து, பேஸ்பால், சாப்ட்பால் ஆகிய விளையாட்டுகளும் இடம் பெற்றுள்ளன.

141-வது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டம் மும்பையில் வருகிற 15-ந்தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் கிரிக்கெட்டை சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி 2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் 20 ஓவர் வடிவிலான கிரிக்கெட் (இரு பாலருக்கும்) இடம் பிடிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்