முதல் டி20: ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி

ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான முதல் டி20 போட்டி சார்ஜாவில் நடைபெற்றது.

Update: 2023-12-29 20:21 GMT

சார்ஜா,

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

அந்த வகையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நேற்று சார்ஜாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் குர்பாஸ் 52 பந்துகளில் 7 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் உள்பட 100 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரகம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றிபெற்றது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் தொடக்க வீரர் குர்பாஸ் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார். இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்