உண்மையில் கடந்த சில தினங்களாக எனக்கு உடல்நலம் சரியில்லை அதனால்... - முகமது சிராஜ்

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

Update: 2024-05-05 04:44 GMT

image courtesy: X (Twitter)

பெங்களூரு,

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 147 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

குஜராத் தரப்பில் அதிகபட்சமாக ஷாரூக் கான் 37 ரன்கள் எடுத்தார். பெங்களூரு தரப்பில் சிராஜ், யாஷ் தயாஸ்ல், வைசாக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 148 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு 13.4 ஓவர்களில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 152 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக டு பிளெஸ்சிஸ் 64 ரன்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் ஜோசுவா லிட்டில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் முகமது சிராஜ்-க்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,

உண்மையில் கடந்த சில தினங்களாக எனக்கு உடல்நலம் சரியில்லை. அதனால் இன்று நான் விளையாட மாட்டேன் என்று நினைத்தேன். ஆனால் உண்மையாக அணிக்காக விளையாட விரும்பினேன். எனவே அதை செய்தது மிகவும் சிறந்தது. இந்த வருடம் புதிய பந்தை வைத்து நிறைய பயிற்சி செய்தது இன்று வெற்றிகரமாக செயல்பட உதவியது. இது எனக்கு கடந்த வருடத்தை நினைவுபடுத்துகிறது.

இன்று (அதாவது நேற்று ) காலை எழுந்த போது என்னால் விளையாட முடியாது என நினைத்ததால் ஓய்வு எடுக்கலாம் என்று விரும்பினேன். இருப்பினும் காலை எழுந்ததும் என்ன செய்ய வேண்டும் என்று நான் வேண்டிக்கொண்டேன். களத்தில் அது கச்சிதமாக நடந்தது. டெஸ்ட் மற்றும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு இடையே மாறுவது சுலபமல்ல. இங்கே விளையாடும் போது நீங்கள் உங்களுடைய 110 சதவீதம் பங்களிப்பை கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்