இங்கிலாந்துக்கு எதிரான 50 ஓவர் கிரிக்கெட் தொடர்; அயர்லாந்து அணி அறிவிப்பு..!!

இங்கிலாந்துக்கு எதிரான 50 ஓவர் (ஒருநாள்) தொடருக்கான அயர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-09-04 06:30 GMT

image courtesy; AFP

டப்ளின்,

அயர்லாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 50 ஓவர் தொடரில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதலாவது போட்டி வரும் 20ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் அந்த தொடருக்கான பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அறிவிக்கப்பட்டுள்ள 15 வீரர்கள் விவரம் பின்வருமாறு;-

 அயர்லாந்து அணி; பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), மார்க் அடேர், ஆண்ட்ரூ பால்பிர்னி, கர்டிஸ் கேம்பர், கரேத் டெலானி, ஜார்ஜ் டோக்ரெல், கிரஹாம் ஹியூம், ஜோஷ் லிட்டில், ஆண்டி மெக்பிரைன், பேரி மெக்கார்த்தி, நீல் ராக், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், தியோ வான் வொர்காம், கிரேக் யங்.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான போட்டி அட்டவணை;-

செப்டம்பர் 20: 1வது ஒருநாள் போட்டி.

செப்டம்பர் 23: 2வது ஒருநாள் போட்டி.

செப்டம்பர் 26: 3வது ஒருநாள் போட்டி.

Tags:    

மேலும் செய்திகள்