டோனிக்கு எம்.சி.சி. கவுரவம்
மேரிலிபோன் கிரிக்கெட் கிளப் புதிதாக 19 வீரர், வீராங்கனைகளுக்கு ஆயுள் உறுப்பினர் கவுரவம் வழங்கி இருக்கிறது.;
லண்டன்,
சர்வதேச கிரிக்கெட் போட்டி விதிமுறைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் மேரிலிபோன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.) லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் செயல்பட்டு வருகிறது. பழம் பெருமை வாய்ந்த இந்த கிளப் புதிதாக 19 வீரர், வீராங்கனைகளுக்கு ஆயுள் உறுப்பினர் கவுரவம் வழங்கி இருக்கிறது.
இதில் இந்திய முன்னாள் கேப்டன் டோனி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, இந்திய பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ், முன்னாள் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி ஆகியோரும் அடங்குவார்கள்.