இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டி; ஆப்கானிஸ்தான் 172 ரன்கள் குவிப்பு...!

ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் அதிரடியாக விளையாடிய குல்பாடின் நைப் 57 ரன்கள் அடித்து அசத்தினார்.;

Update:2024-01-14 20:40 IST

image courtesy; twitter/ @ICC

இந்தூர்,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

அதன்படி இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி இன்று இந்தூரில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் குர்பாஸ் 14 ரன்களிலும், இப்ராஹிம் சத்ரான் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் களமிறங்கிய குல்பாடின் நைப் அதிரடியாக விளையாடினார். இந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கிய அவர் 35 பந்துகளில் 57 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதி கட்ட ஓவர்களில் முஜீப் உர் ரகுமான் மற்றும் கரீம் ஜனத் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் இந்திய அணிக்கு 173 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது. ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக குல்பாடின் நைப் அதிரடியாக விளையாடி 57 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.


Tags:    

மேலும் செய்திகள்