2வது டி20 போட்டி; பாகிஸ்தான் அபார பந்துவீச்சு...நியூசிலாந்து 90 ரன்களில் ஆல் அவுட்

பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் அப்ரிடி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Update: 2024-04-20 16:30 GMT

Image Courtesy: AFP 

ராவல்பிண்டி,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுபயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிம் செய்பர்ட் மற்றும் டிம் ராபின்சன் ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் செய்பர்ட் 12 ரன், ராபின்சன் 4 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய நியூசிலாந்து வீரர்கள் பாகிஸ்தானின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடித்தடுத்து அவுட் ஆகினர். இதில் டீன் பாக்ஸ்க்ராப்ட் 13 ரன், மார்க் சாம்ப்மென் 19 ரன், நீஷம் 1 ரன் , கோல் மெக்கோஞ்சி 15 ரன், மைக்கேல் பிரேஸ்வெல் 4 ரன்,  சோதி 8 ரன் எடுத்து அவுட் ஆகினர்.

இறுதியில் நியூசிலாந்து அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 90 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக சாம்ப்மென் 19 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் அப்ரிடி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 91 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி ஆடி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்