2வது டி20 போட்டி; வங்காளதேசம் - ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதல்

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது.

Update: 2024-05-05 07:38 GMT

image courtesy: @BCBtigers

சட்டோகிராம்,

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது போட்டியில் வங்காளதேசம் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அந்த ஆட்டத்தில் ஜிம்பாப்வே நிர்ணயித்த 125 ரன் இலக்கை வங்காளதேச அணி 15.2 ஓவரில் எட்டிப்பிடித்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி ஆட்டம் மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது.

இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற வங்காளதேசம் முயற்சிக்கும். அதேவேளையில் கடந்த ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க ஜிம்பாப்வே கடுமையாக முயற்சிக்கும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

Tags:    

மேலும் செய்திகள்