தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: ஆந்திர அணி 309 ரன்கள் சேர்ப்பு

ரஞ்சி கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு – ஆந்திரா அணிகள் இடையிலான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது.

Update: 2017-10-08 22:15 GMT

சென்னை,

தமிழக அணி முதல் இன்னிங்சில் 176 ரன்களில் ஆட்டம் இழந்ததை தொடர்ந்து, தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆந்திரா 2–வது நாள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 3–வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய ஆந்திர அணி முதல் இன்னிங்சில் 309 ரன்கள் சேர்த்து ஆல்–அவுட் ஆனது. சுமந்த் (109 ரன்) சதம் அடித்தார். தமிழகம் தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அடுத்து 133 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சில் பொறுமையாக ஆடிய தமிழக அணி 54 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 112 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் அபினவ் முகுந்த் 54 ரன்களுடனும், பாபா அபராஜித் 15 ரன்களுடனும் களத்தில் நிற்கிறார்கள். தொடக்க ஆட்டக்காரர் முரளிவிஜய் 13 ரன்னில் இருந்த போது வலது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ‘ரிட்டயர்ட்ஹர்ட்’ ஆகி வெளியேறினார். அதன் பிறகு அவர் பேட் செய்ய வரவில்லை. கடைசி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

மேலும் செய்திகள்