20 ஓவர் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை - சூர்யகுமார் யாதவ் முதலிடம்
பந்து வீச்சாளர் தரவரிசையில் அடில் ரஷித் முதல்முறையாக ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்துள்ளார்.;
மும்பை,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன்படி 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் (887 புள்ளி) 'நம்பர் ஒன்' இடத்தில் கம்பீரமாக தொடருகிறார்.
2-வது இடத்தில் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானும் (787 புள்ளி), 3-வது இடத்தில் தென்ஆப்பிரிக்காவின் மார்க்ரமும் (755 புள்ளி) இருக்கிறார்கள். இதன் பந்து வீச்சாளர் தரவரிசையில் ரஷித்கானை (ஆப்கானிஸ்தான்) பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் முதல்முறையாக 'நம்பர் ஒன்' இடத்தை பிடித்துள்ளார்.