நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Update: 2023-08-31 03:47 GMT

image courtesy: BLACKCAPS twitter

செஸ்டர் லீ ஸ்டிரிட்,

டிம் சவுதி தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக நான்கு 20 ஓவர் மற்றும் 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செஸ்டர் லீ ஸ்டிரிட்டில் நேற்று இரவு நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 41 ரன்களும் ஃபின் ஆலன் 21 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி சார்பில் பிரைடன் கார்ஸ், லூக் வுட் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இந்த நிலையில் 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 14 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 143 ரன்கள் எடுத்தது. தாவித் மலான் 54 ரன்களும், ஹாரி ப்ரூக் 43 ரன்களும் விளாசினர். இதையடுத்து அந்த அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது. 2-வது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்