விசேஷமான விஷ்ணு ஆலயங்கள்

திருவரங்கத்தில் அரங்கநாதர் பள்ளிகொண்டுள்ள சன்னிதியில் தேங்காய் உடைக்கும் வழக்கம் இல்லை.

Update: 2023-08-11 14:30 GMT

* திருவரங்கத்தில் தேர்த் திருவிழாவின் போது மான்தோல் பையில் நீரைச் சுமந்து அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இதற்கு 'தண்ணீர் சேவை' என்று பெயர். இரவில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு செய்யும் சேவைக்கு 'பந்த சேவை' என்று பெயர்.

* திருவள்ளூரை அடுத்துள்ளது, சோளிங்கர் என்ற திருத்தலம். இங்கு நரசிம்மர் யோக நிலையில் காட்சி தரும் ஆலயம் மலை மேல் அமைந்துள்ளது. சப்த ரிஷிகள் அனைவரும் மோட்சம் வேண்டி, நரசிம்மரை யோக நிலையில் காண விரும்பினர். அதன்படி நரசிம்ம பெருமாள், யோக நிலையில் மலை மீது அமர்ந்து காட்சி தந்தார். அவர் காட்சி தந்தது, கடிகைப் பொழுதுதான் (24 நிமிடம்) என்பதால் இவ்வூர் 'கடிகாசலம்' என்றும் வழங்கப்படுகிறது.

* பவானி சங்கமேஸ்வரர் திருக்கோவிலில் வேணுகோபாலர் சன்னிதிக்குப் பின்புறம் பசு ஒன்று உள்ளது. இப்பசுவின் முன்பகுதியில் ஒரு தலை இருக்கிறது. அதன் பின் உடல் பகுதியில் மற்றொரு தலை உள்ளது. இதுபோல ஒரே உடலில் முன்பக்கம், பின்பக்கம் என இரு தலைகளுடன் காட்சி தரும் பசுவை வேறு எங்கும் காண முடியாது.

* கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் திருக்கோவிலில் இறைவனுக்குக் கோரைக் கிழங்கை சமைத்து நைவேத்தியம் செய்கிறார்கள்.

* திருவரங்கத்தில் அரங்கநாதர் பள்ளிகொண்டுள்ள சன்னிதியில் தேங்காய் உடைக்கும் வழக்கம் இல்லை. தேங்காய் உடைத்தால் சத்தம் எழும். அது இறைவனின் தூக்கத்தைக் கெடுத்துவிடும் என்பதற்காக இங்கே தேங்காய் உடைக்கப்படுவதில்லை. தேங்காய்த் துருவலைத்தான் அரங்கநாதருக்கு நிவேதனமாகப் படைக்கிறார்கள்.

* சில தலங்களில் வாழை தல விருட்சமாக இருப்பது உண்டு. திருக்கழுக்குன்றம், திருப்பைஞ்ஞீலி ஆகிய சிவ தலங்களில் வாழை மரம்தான் தல விருட்சம். அதே போல் வைணவத் திருப்பதிகளில் திருக்கரம்பனூர் மற்றும் திருவெள்ளியங்குடி ஆகிய கோவில்களிலும் வாழை மரம் தல விருட்சமாக அமையப்பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்