நீங்கள் இங்கேபார்ப்பது, ஏதோ ஒரு தீவுக்குள் இருக்கும்ஆலயம் அல்ல.. இது நம்ம தமிழ்நாட்டில் மதுரையில் உள்ள வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பக் குளத்தின் நடுவே அமைந்த நீராழி மண்டபம் ஆகும்.மதுரையில் திருமலை நாயக்கர் அரண்மனையை அமைப்பதற்காக தேவைப்பட்ட மணலை, திருமலைநாயக்கர் இங்கிருந்துதான் எடுத்திருக்கிறார். மண் எடுக்கதோண்டியதால் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்க எண்ணிய மன்னர், அந்தப் பகுதியை சதுர வடிவில் வெட்டி, 1645-ம்
ஆண்டு தெப்பக்குளமாக மாற்றினார். அதன் நடுவில் மண்டபம் ஒன்றினையும் கட்டினார். இந்தத் தெப்பக்குளம் 304.8 மீட்டர் நீளம் மற்றும் அகலம் கொண்டது. தெப்பக்குளத்தைச் சுற்றிலும் சுமார் 15 அடி
உயரத்துக்கு கல் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. குளத்தின் நான்கு பக்கமும் நீள 12 படிக்கட்டுகள் அமைந்துள்ளன.இதன் நடுவில் தான் படத்தில் பார்க்கும் தோட்டத்துடன் கூடிய மண்டபம் இருக்கிறது. இங்கு ஒரு விநாயகர் கோவிலும் உள்ளது. சுரங்கக் குழாய்களின் மூலமாக வைகை நதி நீர் இந்த தெப்பக்குளத்திற்கு வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.தைப்பூசம் அன்று இந்தத் தெப்பக்குளத்தில் மதுரை மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேஸ்வரருக்கும் தெப்பத்திருவிழா நடத்தப்படும்.