இன்று நாள் எப்படி..? ராசி பலன்கள்

மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு தொட்டது துலங்கும் நாள்.

Update: 2023-10-19 00:26 GMT

19.10.2023 சோபகிருது வருடம் ஐப்பசி மாதம் 2-ந் தேதி வியாழக்கிழமை. பஞ்சமி திதி இரவு(10.58) க்கு மேல் சஷ்டி திதி. கேட்டை

நட்சத்திரம் இரவு(8.23) க்கு மேல் மூலம் நட்சத்திரம். சித்தயோகம். சமநோக்குநாள்.

நல்லநேரம் : காலை : 10.45-11.45, மாலை : 5.00-6.00

ராகுகாலம் : மதியம்: 1.30-3.00

எமகண்டம் : காலை : 6.00-7.30

குளிகை : காலை: 9.00-10.30

வாரசூலை : தெற்கு

சூரிய உதயம் : 6.10

அதிர்ஷ்ட எண்கள் : 1,5,9.

தினப்பலன்

மேஷம்

யோகங்கள் வந்து சேர யோசித்து செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். வீட்டில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நிச்சயித்த காரியமொன்றில் திடீர் மாற்றங்களை சந்திக்க நேரிடலாம்.

ரிஷபம்

வருமான பற்றாக்குறை அகலும் நாள். பிள்ளைகளால் பெருமை உண்டு. வளர்ச்சி பாதைக்கு வித்திட்ட சிலரின் சந்திப்பு கிட்டும். அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேர்க்க முன்வருவீர்கள்.

மிதுனம்

போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் கூடும் நாள். ஆரோக்கியம் சீராகும். பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். பழைய கடன் பிரச்சினைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

கடகம்

சந்தோஷம் கூடும் நாள். தடைகள் அகலும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்து கொள்வீர்கள். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சிகள் கைகூடும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும்.

சிம்மம்

இனிமையான நாள். மனதில் ஊக்கமும், உற்சாகமும் குடிகொள்ளும். தனவரவில் இருந்த தடைகள் அகலும். பழைய வாகனத்தை கொடுத்து புதிய வாகனம் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள்.

கன்னி

புதிய பாதை புலப்படும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். உடன்பிறப்புகள் வழியில் உள்ளம் மகிழும் சம்பவமொன்று நடைபெறலாம்.

துலாம் 

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும். வருமானம் வந்த மறுநிமிடமே செலவாகும்.

விருச்சிகம்

அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். அரைகுறையாக நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஆதரவாக நடந்துகொள்வர். பால்ய நண்பர் ஒருவரால் பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

தனுசு

காரிய வெற்றிக்கு கண்ணிய மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். வீடு, இடம் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். பிறருக்காக பொறுப்பு சொல்லி வாங்கி கொடுத்த தொகை வந்து சேரலாம்.

மகரம்

செல்வ நிலை உயரும் நாள். கல்யாண பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். லட்சியங்களை நிறைவேற்றுவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நன்மை உண்டு.

கும்பம்

முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். பொறுப்புகள் அதிகரிக்கும். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைப்பீர்கள். வாகன பழுது செலவுகளால் கையிருப்பு கரையலாம்.

மீனம்

தன்னம்பிக்கையோடு பணி புரிந்து தடைகளை அகற்றிக் கொள்ளும் நாள். விட்டுப்போன விவாக பேச்சுகள் மீண்டும் வந்து சேரலாம். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும்.

பொதுப்பலன்

மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு தொட்டது துலங்கும் நாள். மகர ராசிக்காரர்களுக்கு

கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் நாள்.

சந்திராஷ்டமம்: இரவு (8.23)வரை மேஷம்; பிறகு ரிஷபம்.

Tags:    

மேலும் செய்திகள்