திருவண்ணாமலை சென்றால் இந்த லிங்க தரிசனத்தை மறக்காதீங்க..!

திருவண்ணாமலைக்கு வந்த ரமண மகரிஷிக்கு மரணம் பற்றிய எண்ணம் உண்டானபோது, பாதாள லிங்கத்தின் சன்னிதியில் சென்று வழிபட்டார்.

Update: 2024-07-07 06:12 GMT

சிவபெருமான் வீற்றிருக்கும் முக்கியமான தலங்களில் ஒன்று, திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயம். இந்தக் கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில், ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ளது, பாதாள லிங்கம். இங்கு 'பாதாள லிங்கேஸ்வரர்' என்ற பெயரில் இறைவன் லிங்க வடிவில் காட்சி தருகிறார். இந்த சிவலிங்கத்தை தரிசனம் செய்ய, சில படிகள் பாதாளத்தில் இறங்கிச் சென்று வழிபட வேண்டும். இந்த சிவலிங்கத்திற்கு முன்பாக நந்தி சிலையும் இருக்கிறது.

ஆன்மிக மற்றும் ஞானத்திற்கான தேடலுடன் திருவண்ணாமலைக்கு வந்தவர், ரமண மகரிஷி. அவருக்கு மரணம் பற்றிய எண்ணம் உண்டானபோது, இங்குள்ள பாதாள லிங்கத்தின் சன்னிதியில் சென்று வழிபட்டார். அங்கு ஒரு புற்று இருந்தது. அதற்குள் சிவயோகி ஒருவர் இருப்பதை உணர்ந்த அவர், அங்கேயே தவத்தில் அமர்ந்து ஞானம் அடைந்ததாக சொல்லப்படுகிறது.

மரண பயத்தை போக்கும் இந்த பாதாள லிங்கமும், கிரிவலப் பாதையின் மலைக்கு பின்புறம் அமைந்த அடி அண்ணாமலை என்ற பெயரில் அமைந்த தனி ஆலயத்தில் உள்ள சிவலிங்கமும் விசேஷமானது. எனவே, திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் இந்த இரண்டு லிங்கங்களையும் மனமுருக வழிபட்டால், மரணபயம் விலகும், மன நிறைவு உண்டாகும் என்பது நம்பிக்கை.

Tags:    

மேலும் செய்திகள்