பிரதோஷம்: சிவன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
சிவன் கோவில்களில் நடந்த பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;

சென்னை,
சிவன் கோவில்களில் நடந்த பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், தஞ்சை பெரிய கோவில், ராஜபாளையம் சொக்கர் என்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், மதுரை சாலையில் உள்ள தாரண்யா நந்தீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
முன்னதாக நந்திக்கு மஞ்சள், தேன், இளநீர், பால், தயிர் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. மாநிலம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.