வாரம் ஒரு திருமந்திரம்

திருமந்திரம் நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.

Update: 2022-06-07 06:31 GMT

மூவாயிரம் பாடல்களால், சிவ நெறியை பறைசாற்றியவர் திருமூலர். இவரது அந்த மூவாயிரம் பாடல்களும், 'திருமந்திரம்' என்று அழைக்கப்படுகின்றன. அவற்றில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.

பாடல்:-

அறிந்திடுவார்கள் அமரர்கள் ஆகத்

தெரிந்திடு வானோர் தேவர்கள் தேவன்

பரிந்திடு வானவன் பாய்புனல் சூடி

முரிந்திடு வானை முயன்றிடு நீரே.

விளக்கம்:- தன்னை வணங்குபவர்களை, தேவர் களாக மாற்றுபவர் சிவபெருமான். வானுலகத்தினர், தேவர்கள், தெய்வங்கள் போன்றவர்கள் தங்களின் நிலையில் வாழும்படி அருளியவர் அவர்தான். உலகம் உயிர்ப்புடன் இருப்பதற்காக கங்கையை தன்னுடைய தலையில் சூடியவர், சிவபெருமான். அவரை நீங்கள் வணங்குங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்