தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு சிறப்பு யாகம்

தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு சிறப்பு யாகம்

Update: 2022-12-17 18:45 GMT

வேதாரண்யத்தை அடுத்த மறைஞாயநல்லூரில் மேலமறைகாடர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கால பைரவர் அவதார திருநாள் மற்றும் தேய்பிறை அஷ்டமியை யொட்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து ஆனந்த் சிவச்சாரியார்கள் தலைமையில் சிறப்பு யாக பூஜை நடந்தது. பின்னர் பைரவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், தேன், தயிர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்