கொள்ளிடம் அருகே தண்ணீர் பந்தல் கிராமத்தில் சீரடி சாய்பாபா கோவிலில் சாய்பாபா ஜீவசமாதி அடைந்தநாள் அனுசரிக்கப்பட்டது. இதைெயாட்டி சாய்பாபாவுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், தேன் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை வழிபட்டனர்.