கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே உள்ள நயினாரகரத்தில் மார்கழி பஜனை நடைபெற்றது. சுமார் 36 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த பஜனை அதிகாலை 5 மணிக்கு கன்னி விநாயகர் கோவிலில் தொடங்கி சேனை விநாயகர் கோவில் தெரு, பாக்கிய விநாயகர் கோவில் தெரு, குலசேகரநாதர் மற்றும் வெங்கடாஜலபதி கோவில் தெரு வழியாக கருப்பா நதிக்கரையில் வீற்றிருக்கும் குலசேகர அம்மன் கோவில் வரை சென்று விட்டு, மீ்ண்டும் சேனை விநாயகர் கோவில் வந்தடைகிறது.
மார்கழி பஜனையை பக்தர் குழுவினர் செய்துள்ளனர்.