நாகநாதசாமி கோவிலில் லட்சார்ச்சனை

திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவிலில் லட்சார்ச்சனை நடந்தது.

Update: 2023-10-10 21:19 GMT

திருவிடைமருதூர்;

திருநாகேஸ்வரத்தில் ராகு தலமான நாகநாதர் கோவில் உள்ளது. இத்திருத்தலத்தில் மட்டுமே நவக்கிரகங்களுள் முதன்மையானவராக திகழும் ராகு பகவான், நாகவல்லி, நாகக்கன்னி என இரு துணைவியருடன் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார். இவரது திருமேனியில் பால்அபிஷேகம் செய்யும் பொழுது அந்த பால் நீல நிறமாக மாறும். கடந்த 8-ந் தேதி பிற்பகல் 3.40 மணிக்குராகுபகவான் மேஷ ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்ததை முன்னிட்டு சிறப்பு பரிகார 2-ம் கட்ட லட்சார்ச்சனை நடந்து வருகிறது. இன்று(புதன்கிழமை) லட்சார்ச்சனை நிறைவு பெறுகிறது. நேற்று நடைபெற்ற லட்சார்ச்சனையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ராகு பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சிவா என்ற சிவகுருநாதன், உதவி ஆணையர் உமாதேவி, அறங்காவலர்கள் கோ. கண்ணையன், ரா. பானுமதி, அ.சின்னையன், சு. ஜெயராமன் மற்றும் பணியாளர்கள் செய்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்