தொடர் விடுமுறை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
திருச்செந்தூர்,
தொடர் விடுமுறை காரணமாக ஆன்மீக சுற்றுலாத்தலமான திருச்செந்தூரில் குடும்பத்துடன் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தரிசித்து வருகின்றனர். ஆன்மீக சுற்றுலாத்தலங்களில் முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
திருச்செந்தூர் கடலில் புனித நீராடிய பின் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் முருகனை தரிசனம் செய்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள், பால்குடம் எடுத்தும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தியும் வருகின்றனர்.
பக்தர்கள் கூட்டத்தால் கோவில் வளாகத்திலும் வாகனங்கள் நிறுத்திடத்திலும் மிகுந்த நெரிசல் காணப்படுகிறது. மேலும் ரத வீதிகளிலும், முக்கிய சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
கடந்த சில தினங்களாகவே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதால் திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.