பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழா - குவிந்த பக்தர்கள்
பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவிற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.;
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில். இந்த கோவிலில் வருடம் தோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த விழாவிற்கு ஈரோடு, கோவை, சேலம், திருப்பூர் உட்பட தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, கேரளா ஆகிய பகுதியில் இருந்தும் பக்தர்கள் இந்த குணடம் திருவிழாவுக்கு வருவார்கள்.
வழக்கம் போல இந்த வருடமும் கடந்த 11-ம் தேதி பூச்சாற்றுடன் விழா தொடங்கியது. 19-ம் தேதி கம்பம் சாட்டுவிழா நடைபெற்றது. நாளை குண்டம் திருவிழா நடக்கிறது. இதையொட்டி குண்டத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணிக்கு பூசாரி தெப்பக்குளம் சென்று நீராடி வேப்பிலை எடுத்துக்கொண்டு தாரதப்பட்டை முழங்க குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்வார். இதைத்தொடர்ந்த பூசாரி முதலிலே குண்டம் இறங்குவார்.
அவரை தொடர்ந்து பக்தர்கள் தீ மிதிப்பார்கள். குண்டத்தில் இறங்குவதற்காக பக்தர்கள் கடந்து மூன்று நாட்களாகவே குவிந்து இருக்கிறார்கள். பக்தர்களைத் தொடர்ந்து விவசாயிகள் தங்கள் மாடுகளை குண்டத்தில் இறக்கி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவையொட்டி அப்பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது