அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.

Update: 2023-04-15 22:01 GMT

அந்தியூர்

அந்தியூரில் பழமையான பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான குண்டம் விழா கடந்த 5-ந் தேதி நடந்தது. 7-ந் தேதியில் இருந்து 10-ந் தேதி வரை தேரோட்டம் நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான நேற்று கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்டார்கள். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்