வாரம் ஒரு திருமந்திரம்

திருமந்திரம் நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

Update: 2022-11-15 01:52 GMT

மூவாயிரம் பாடல்களால் ஆன திருமந்திரம் நூலை இயற்றியவர், திருமூலர். இவர் மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததாகவும், ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் மூவாயிரம் பாடல்களை இயற்றியதாகவும் சொல்லப்படுகிறது. சைவ நெறிக்கு ஈடாக வைத்து போற்றப்படும் அந்த நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

பாடல்:-

எல்லா உலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய்

நல்லார் உள்ளத்து மிக்க அருள் நல்கலால்

எல்லாரும் உய்யக்கொண்டு இங்கே அளித்தலால்

சொல்லார்ந்த நற்குரு சுத்த சிவமே.

விளக்கம்:-

அனைத்து உலகங்களுக்கும் அப்பாற்பட்டவர் சிவபெருமான். அவர் இந்த உலகத்தில் வாழும் நல்லவர்கள் உள்ளத்தில் மேலோங்கி நின்று அருள் செய்வார். அந்த பெருமான், நல்லவர்களை மட்டும் அல்லாமல் பிறருக்கும் அருள் செய்பவர். அதனால்தான் உயிர்கள் எல்லாவற்றுக்கும் சுத்த சிவமாகிய, ஈசனே புகழ்மிக்க குருவாகவும் திகழ்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்