திருச்செந்தூர் தூண்டிகை விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்

16 ஆண்டுகளுக்குப் பிறகு தூண்டிகை விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.;

Update:2025-04-21 02:56 IST

தூத்துக்குடி,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உப கோயிலான தூண்டிகை விநாயகர் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்கள் அனைவரும் முதலில் தூண்டிகை விநாயகரை வணங்கி தேங்காய் உடைத்து விட்டு, முருகனை தரிசிப்பது வழக்கம்.

இந்நிலையில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு தூண்டிகை விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இதனை தொடர்ந்து, நேற்றைய தினம் தூண்டிகை விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் திராளான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். 

Full View
Tags:    

மேலும் செய்திகள்