கிரகங்களின் பெயர்ச்சி விவரம்
கிரகங்களின் பெயர்ச்சி விவரங்கள் பின்வருமாறு.
குருவின் வக்ர காலம்
14.4.2021 முதல் 13.9.2021 வரை, கும்ப ராசியில் அதிசார கதியில் குரு சஞ்சரிக்கின்றார்.
16.6.2021 முதல் 13.9.2021 வரை, கும்ப ராசியில் குரு வக்ரம் பெறுகின்றார்.
14.9.2021 முதல் 12.10.2021 வரை, அவிட்டம் 2-ம் பாதத்தில் மகர ராசியில் குரு வக்ரம் பெறுகின்றார்.
சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை, மகர ராசியில் சனி வக்ரமாகிறார்.
குருப்பெயா்ச்சிக் காலம்
13.11.2021 (சனிக்கிழமை) மாலை 6.10 மணிக்கு, அவிட்டம் நட்சத்திரம் 3-ம் பாதத்தில் கும்ப ராசிக்கு குரு பெயர்ச்சியாகின்றார்.
மீண்டும் பங்குனி மாதம் 30-ந் தேதி (புதன்கிழமை) 13.4.2022 அன்று இரவு 4.09 மணிக்கு பூரட்டாதி 4-ம் பாதத்தில் மீன ராசிக்கு குரு பகவான் பெயா்ச்சியாகிச் செல்கின்றார்.
ராகு- கேது பெயா்ச்சி
பிலவ வருடம் பங்குனி மாதம் 7-ந் தேதி (திங்கட்கிழமை) 21.3.2022 அன்று பகல் 2.52 மணிக்கு, கார்த்திகை 1-ம் பாதத்தில் மேஷ ராசியில் ராகுவும், விசாகம் 3-ம் பாதத்தில் துலாம் ராசியில் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள்.