ஆன்மிகத் துளிகள்

‘‘உண்மையில் இல்லாத ஒன்றை, நீ இருப்பதாக நினைப்பதற்குக் காரணம், உன்னுடைய அறியாமையே ஆகும். அது ஒரு கயிற்றைப் பாம்பு என்று நீ கற்பனை செய்து கொள்வதற்கு சமமானது. உண்மையை மட்டும் நம்புங்கள்’’

Update: 2017-10-24 00:45 GMT
அறியாமை

‘‘உண்மையில் இல்லாத ஒன்றை, நீ இருப்பதாக நினைப்பதற்குக் காரணம், உன்னுடைய அறியாமையே ஆகும். அது ஒரு கயிற்றைப் பாம்பு என்று நீ கற்பனை செய்து கொள்வதற்கு சமமானது. உண்மையை மட்டும் நம்புங்கள்’’

–ராமர்.

முதல் கடமை

‘‘ஒருவன் தன்னை வெறுக்கத் தொடங்கிவிட்டால், அவன் கீழ்            நிலைக்குச் செல்வதற்கான கதவு திறந்துவிட்டது என்று பொருள். நம்மை நாம் வெறுக்காமல் இருப்பதுதான் நமது முதற்கடமை’’

–விவேகானந்தர்.

காலம்

‘‘காற்று வீசும்போது பல பொருட்கள் காற்றோடு கலந்து பறக்கின்றன. பின் மேகம், பஞ்சு, துணி, புல், தூசி எனப்பிரிந்துவிடுகிறது. அதுபோல் காலத்தால் மனிதர்கள் ஒன்று சேர்ந்து வாழ்வதும், பின் பிரிந்து செல்வதும் நிகழ்கிறது’’

–கிருஷ்ணர்.

மேலும் செய்திகள்