ரஷியர்களுக்கு வரும் ஜூலை 1ந்தேதி முதல் விசாக்கள் அறிமுகம்; உக்ரைன் முடிவு

ரஷியர்களுக்கு வருகிற ஜூலை 1ந்தேதி முதல் விசாக்களை அறிமுகம் செய்ய உக்ரைன் முடிவு செய்துள்ளது.;

Update:2022-06-17 18:02 IST



கீவ்,



உக்ரைன் மீது அதிபர் புதின் தலைமையிலான ரஷிய படைகள் மேற்கொண்டு வரும் போரானது தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு தரப்பிலும், பாதிப்புகள் பெருமளவில் ஏற்பட்டு உள்ளன.

எனினும், போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் இரு நாடுகளும் முனைப்பு காட்டவில்லை. இரு நாட்டை சேர்ந்த வீரர்களும், பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் உயிரிழந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர் உக்ரைனை விட்டு வெளியேறி உள்ளனர்.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று வெளியிட்ட அறிவிப்பில், ரஷிய கூட்டமைப்பின் குடிமக்களுக்கு உக்ரைன் விசா நடைமுறைகளை அறிமுகப்படுத்த அரசு முடிவு செய்து உள்ளது.

இதன்படி, வருகிற ஜூலை 1ந்தேதி முதல் விசாக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான முடிவு அரசால் இன்று எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என அவர் தனது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்