அமெரிக்காவில் கிரகணத்தின் போது வானில் பறந்த ஏலியன்கள்? வீடியோ வைரல்
அமெரிக்காவில் 8-ம் தேதி முழு சூரிய கிரகணத்தின் போது அங்கு வசிப்பவர்கள் விசித்திரமான பறக்கும் தட்டை கண்டதாக கூறியுள்ளனர்.
வாஷிங்டன்,
உலகின் மிக அரிய சூரிய கிரகணம் 8-ம் தேதி தென்பட்ட போது, அமெரிக்காவில் உள்ள டெக்ஸஸ் மாகாணத்தில், ஏலியன்கள் பறக்கும் தட்டு ஒன்று தென்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக மக்கள் பலர் 8-ம் தேதி தென்பட்ட சூரிய கிரகணத்தை பிரத்தியேக தொலைநோக்கி மூலமாக கண்டுகளித்தனர்.
இந்த நிலையில், டெக்ஸஸ் மாகாணத்தில் சூரிய கிரகணத்தின் போது ஏலியன்கள் பறக்கும் தட்டு ஒன்று பறந்ததாக இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
மேகக்கூட்டங்களுக்கு நடுவே வட்ட வடிவ மர்ம பொருளொன்று சூரிய கிரகணத்தின் போது, அதிக வேகத்திலும் கண்ணிமைக்கும் நொடியிலும் பறந்து சென்றது.இந்த காணொளியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ள மக்கள், ஏலியன்கள் உலாவியதாக கூறியுள்ளனர். சிலர் இதனை விண்கலமாக இருக்கலாம் என்று கூறினாலும், மற்றவர்கள் இது கிரகணத்தின் போது மேகங்களுக்கு மேலே பறக்கும் விமானத்தின் நிழல் என்று கூறுகின்றனர்.
ஏற்கனவே அமெரிக்காவில் ஏலியன்கள் நடமாட்டம் இருப்பதாக பல ஆண்டுகளாக நம்பப்பட்டு வரும் நிலையிலும், பல்கேரியா ஜோதிடர் என அழைக்கப்படும் மறைந்த பாபா வாங்கவின் கணிப்புப்படி ஏலியன்கள் நடமாட்டம் இந்த ஆண்டு மக்கள் மத்தியில் அரங்கேறும் என கூறப்பட்டுள்ள நிலையிலும், தற்போது இந்த சம்பவம் பதிவாகியுள்ளது மக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
இந்த வீடியோவைப் பகிர்ந்து, ஒரு எக்ஸ் பயனர் கூறியிருப்பதாவது: ரெட் அலர்ட், சூரிய கிரகணத்தின் போது ஆர்லிங்டன் டெக்சாஸ் மீது யுஎப்ஓ இன் புதிய வீடியோ வெளிவந்தது. மேலும் அது மேகங்களுக்குள் மறைந்து போகிறது. எக்ஸ் இல் வீடியோ பகிரப்பட்டதிலிருந்து, அது வைரலாகி 8 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.