உலகின் மிகப்பெரிய பவளப்பாறையான கிரேட் பேரியர் பகுதியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்
ஆஸ்திரேலியாவில் காணப்படும் கிரேட் பேரியர் உலகின் மிகப்பெரிய பவளப்பாறை என அழைக்கப்படுகிறது.
சமீப காலமாக இவை சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் வெப்பமயமாதல் காரணமாக கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறது. இவற்றை அழிந்து வரும் நிலையில் உள்ள இனங்களின் பட்டியலில் சேர்க்க வேண்டும் என கடந்த நவம்பர் மாதம் யுனெஸ்கோ பாரம்பரிய குழு கூறியது. ஆனால் அது சுற்றுலா துறையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் ஆஸ்திரேலிய அரசாங்கம் அந்த பட்டியலில் சேர்க்க விரும்பவில்லை.
இந்தநிலையில் யுனெஸ்கோ தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கிரேட் பேரியர் பகுதியில் நீரின் தரம் மற்றும் நிலையான மீன்பிடித்தலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்தது. யுனெஸ்கோவின் இந்த முடிவை வரவேற்பதாக ஆஸ்திரேலியா சுற்றுச்சூழல் துறை மந்திரி டான்யா பிலிபெர்செக் கூறினார்.