செபலோனியா தீவு அருகே நடுக்கடலில் கப்பல்கள் மோதி விபத்து

செபலோனியா தீவு அருகே நடுக்கடலில் கப்பல்கள் ஒன்றுடன் மற்றொன்று மோதி விபத்து ஏற்பட்டது.

Update: 2023-09-06 19:18 GMT

ஏதென்ஸ்,

ஐரோப்பா கண்டத்தின் அயனி கடலில் கிரீசுக்கு சொந்தமான செபலோனியா தீவு அமைந்துள்ளது. இந்தநிலையில் மால்டா நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று சரக்குகளை ஏற்றிக்கொண்டு செபலோனியா தீவு நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது அயனி கடலில் இருந்து போர்ச்சுகலுக்கு 12 மாலுமிகளுடன் மற்றொரு சரக்கு கப்பல் சென்றது.

இந்தநிலையில் எதிர்பாராதவிதமாக இந்த இரண்டு கப்பல்களும் நடுக்கடலில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் இரு கப்பல்களும் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தன. தகவல் அறிந்த கடற்படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். துரிதமான நடவடிக்கை காரணமாக தீ பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என முதல்கட்டமாக தெரிய வந்துள்ளது. விபத்து குறித்து விசாரணை நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்