இந்திய- ஆஸ்திரேலிய உறவை 'டி-20' கிரிக்கெட்டுக்கு ஒப்பிட்ட பிரதமர் மோடி

இந்திய- ஆஸ்திரேலிய உறவு, டி-20 கிரிக்கெட் போன்று வளர்ச்சியை எட்டியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.;

Update:2023-05-25 01:40 IST

சிட்னி,

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீசை சந்தித்து இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்தினார். தொடர்ந்து இருவரும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது பிரதமர் மோடி, இந்திய- ஆஸ்திரேலிய உறவு பற்றி பெருமிதத்துடன் சில கருத்துகளை கூறினார். அத்துடன் அவர் இரு தரப்பு உறவை டி-20 கிரிக்கெட்டுக்கு ஒப்பிட்டார்.

அப்போது அவர் கூறுகையில், "கிரிக்கெட் மொழியில் சொல்வதென்றால், நமது உறவு அதிரடியாக டி-20 கிரிக்கெட் போன்று வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்திய, ஆஸ்திரேலிய உறவு சிறப்பான ஒன்று. பிரதமர் அல்பானீசுடன் நடத்திய பேச்சு ஆக்கப்பூர்வமான ஒன்றாகும்" என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்