இந்தியா வழங்கிய ரோந்து விமானம் - ராமர், ராவணனை குறிப்பிட்டு பேசிய இலங்கை அதிபர்...

இலங்கையில் கடல்சார் கண்காணிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக ட்ரோனியர் ரோந்து விமானத்தை இந்தியா வழங்கியது.

Update: 2022-08-16 12:44 GMT

கோப்புப்படம் 

கொழும்பு,

இலங்கையில் கடல்சார் கண்காணிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக ட்ரோனியர் ரோந்து விமானத்தை இந்தியா இலங்கைக்கு வழங்கியது. கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமானப்படை தளத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் அதிபர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்று பேசினார்.

அப்போது, முன்னாள் பிரதமர் நேரு, இலங்கைக்கு செய்த உதவிகளை சுட்டிக்காட்டியதோடு, ஐ.நா. சபையில் இலங்கை இடம் பெறுவதற்கு நேரு உதவி செய்ததாகவும் குறிப்பிட்டார்.

மேலும், இந்தியாவும் இலங்கையும் ஒரு நாணயத்தில் இரு பக்க‌ங்கள் என்ற ரணில், இரு நாடுகளுக்கும் தனியான பயணம் கிடையாது என்றும் விமானம் வழங்கியிருப்பதன் மூலம் இரு நாட்டுடனான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். இந்தியா ராமரை மாவீரனாக பார்ப்பதாக தெரிவித்த ரணில், ராமர், ராவண‌ன் இருவரையும் மாவீர‌ர்களாக இலங்கை பார்க்கிறது என்றார்.

 

Tags:    

மேலும் செய்திகள்