தொடங்கப்பட்ட 5 நாட்களில் மீண்டும் மூடப்பட்ட புகுஷிமா அணுமின் நிலையம்

ஜப்பானில் தொடங்கபப்ட்ட 5 நாட்களில் புகுஷிமா அணுமின் நிலையம் மீண்டும் மூடப்பட்டுள்ளது.

Update: 2024-11-05 03:56 GMT

டோக்கியோ,

ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு 9 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் புகுஷிமாவில் உள்ள ஒனகாவா அணுமின் நிலையம் கடுமையாக சேதம் அடைந்தது. இதனையடுத்து அந்த அணுமின் நிலையம் மூடப்பட்டது.

இங்கு பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததால் கடந்த 29-ந் தேதி புகுஷிமா அணுமின் நிலையம் திறக்கப்பட்டது. எனவே விரைவில் அங்கு மின் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நியூட்ரான் தரவு தொடர்பான எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் திறக்கப்பட்ட 5 நாட்களில் புகுஷிமா அணுமின் நிலையம் மீண்டும் மூடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்