உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 64.51 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.57 கோடியாக அதிகரித்துள்ளது.

Update: 2023-04-19 01:34 GMT

வாஷிங்டன்,

சீனாவின் உகான் நகரில் 3 ஆண்டுகளுக்கு முன்பு, 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா வைரசின் பாதிப்பு கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. அதன்பின்பு, கொரோனா வைரசானது 228-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் முதலில் ஊரடங்கை அமல்படுத்தின. அதன்பின்பு, தடுப்பூசி கண்டறியப்பட்டு, மக்களுக்கு அவற்றை செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. இதன்பின்னர் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல திரும்பி வருகின்றனர்.

எனினும், உருமாற்றமடைந்த வைரசானது தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 கோடியே 57 லட்சத்து 85 ஆயிரத்து 977 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 4 லட்சத்து 16 ஆயிரத்து 394 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 65 கோடியே 85 லட்சத்து 26 ஆயிரத்து 244 பேர் குணமடைந்துள்ளனர். எனினும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 68 லட்சத்து 43 ஆயிரத்து 339 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்