அமீரக-சவுதி எல்லையில் 8 ஆண்டுகளாக சிக்கித் தவித்த தமிழக மீனவர் - தாயகம் திரும்ப இந்திய தூதரகம் நடவடிக்கை

அமீரக-சவுதி எல்லையில் 8 ஆண்டுகளாக சிக்கித் தவித்த தமிழக மீனவர் தாயகம் திரும்ப இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Update: 2024-07-12 19:52 GMT

அபுதாபி,

அபுதாபியில் உள்ள அமீரக- சவுதி எல்லை பகுதியான சிலாவில் தமிழகத்தை சேர்ந்த முத்துவேலன் என்ற மீனவர் பணியாற்றி வந்தார். இவரது அடையாள ஆவணங்கள் காலாவதியாகி கடந்த 8 ஆண்டுகளாக சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தார்.

விசா மற்றும் பாஸ்போர்ட் இல்லாமல் செய்வதறியாமல் இருந்த தமிழக மீனவரின் நிலை குறித்து அபுதாபி தமிழ் மக்கள் மன்றம் சார்பில் இந்திய தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மீனவரின் நிலை குறித்து இந்திய தூதரக அலுவலர் அஷ்பக் கேட்டறிந்தார்.

தொடர்ந்து அந்த மன்றத்தின் ஒத்துழைப்பில் இந்திய தூதரக அதிகாரி டாக்டர் பாலாஜி தமிழக மீனவர் முத்துவேலன் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான அனுமதி மற்றும் அபுதாபியில் இருந்து திருச்சிக்கு செல்ல விமான டிக்கெட் ஆகியவற்றை ஏற்பாடு செய்தார்.

இதையடுத்து அமீரக தமிழ் மக்கள் மன்ற தலைவர் சிவகுமார் தலைமையிலான குழுவினர் தமிழக மீனவர் முத்துவேலனிடம் பாஸ்போர்ட், டிக்கெட் மற்றும் செலவுக்கு பணம் ஆகியவைகளை நேரில் வழங்கினர். அவற்றை பெற்றுக்கொண்ட அவர் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு கண்ணீர் மல்க நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்