சிரியாவில் துப்பாக்கிச்சண்டை; 14 பாதுகாப்புப்படையினர் பலி

சிரியாவில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 14 பாதுகாப்புப்படையினர் கொல்லப்பட்டனர்.

Update: 2024-12-26 06:30 GMT

டமாஸ்கஸ்,

சிரியாவின் கிர்பெத் அல்-மாஸா பகுதியில் முன்னாள் ஆட்சி அதிகாரியான முகமது கன்ஜோ ஹசனை கைது செய்ய ராணுவ நடவடிக்கைத்துறையின் கீழ் பாதுகாப்புப்படையின் ரோந்து குழு முயன்றுள்ளது. அப்போது ஹசனின் ஆதரவாளர்கள் மற்றும் உள்ளூரை சேர்ந்த துப்பாக்கி ஏந்திய போராளிகள் பாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்புப்படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 14 பாதுகாப்புப்படையினர் உயிரிழந்தனர். மேலும் 3 போராளிகள் கொல்லப்பட்டதாகவும், சிலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் சிரியாவின் மனித உரிமைகளுக்கான கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று பாதுகாப்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, சிரியாவில் உள்நாட்டுப்போர் தீவிரமடைந்த நிலையில் அதிபர் பஷிர் அல் அசாத் தலைமையிலான அரசு கடந்த 8ம் தேதி கவிழ்ந்தது. அபு முகமது அல் ஜவ்லானி தலைமையிலான ஹயத் தஹிர் அல் ஷம் என்ற கிளர்ச்சிக்குழு சிரியாவில் ஆட்சியை கைப்பற்றியது. அதிபராக இருந்த பஷிர் அல் அசாத் ரஷியா தப்பிச்சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்