பெண்கள் உயர்கல்வி பயில தடை ஏன்? ஆப்கானிஸ்தான் மந்திரி அளித்த வினோத விளக்கம்
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.;
காபூல்,
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் பெண்கள் சொல்லொணா துயருற்று வந்தனர். இந்தநிலையில் தற்போது பெண்களுக்கு உயர்கல்வி பயிலவும் தடை விதித்து அந்த நாட்டின் அரசாங்கம் உத்தரவிட்டது. இதற்கு மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் என பல தரப்பினர் நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். மேலும் சர்வதேச அளவிலும் இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியது.
இதனையடுத்து நாட்டின் உயர்கல்வித்துறை மந்திரி நேடா முகமது இதுகுறித்து விளக்கம் அளித்து உள்ளார். மாணவிகள் கல்லூரி வரும்போது திருமணத்துக்கு செல்வதுபோல் ஆடை அணிந்து வருகிறார்கள். மேலும் ஆண்களின் துணை இன்றி அவர்கள் கல்லூரிக்கு வந்து செல்கிறார்கள். எனவே இந்த தடை அவசியமாகிறது என தெரிவித்தார்