பொருளாதார நெருக்கடியால் வறுமை: பாகிஸ்தானில் வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் வறுமையில் சிக்கி தவித்துவரும் நிலையில், அங்கு வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

Update: 2023-04-10 20:22 GMT

கோப்புப்படம்

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு பலர் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் வழிப்பறி, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அங்குள்ள ஒரு டெய்லர் கடையில் துப்பாக்கிமுனையில் மிரட்டி திருட்டு சம்பவம் அரங்கேறி உள்ளது.

அதாவது குஜ்ரன்வாலா நகரில் உள்ள ஒரு டெய்லர் கடைக்குள் சம்பவத்தன்று மர்ம நபர்கள் வாடிக்கையாளர்கள் போல சென்றுள்ளனர். திடீரென அவர்கள் கடைக்குள் இருந்த தொழிலாளர்களை துப்பாக்கிமுனையில் மிரட்டி தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த விலை மதிப்புமிக்க ஆடைகள், செல்போன்கள் உள்ளிட்டவற்றை திருடி விட்டு தப்பி சென்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்