இலங்கை பேருந்து விபத்து - 11 பேர் உயிரிழப்பு..!
இலங்கை பேருந்து விபத்தில் 11பேர் உயிரிழந்துள்ளனர்.;
பொலனறுவை,
இலங்கையில், நேற்று (ஞாயிற்று கிழமை) 67 பயணிகளுடன் கதுருவெலயிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. பொலநறுவை அருகே வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்று மானம்பிட்டியவில் கொட்டாலிய பாலத்தின் மீது மோதி மகாவலி ஆற்றில் விழுந்தது.
இந்த விபத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்புப்படைக்கு தகவல் தெரிவித்தனர். பலர் ஆற்றில் குதித்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் அங்கு வந்த மீட்புபடையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதுவரை 40 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஏராளமானோர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மீட்கப்பட்டவர்கள் பொலனறுவை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.