அணுசக்தி ஆற்றல் பயன்பாட்டின் மூலம் கார்பன் வெளியீட்டை குறைக்க தென்கொரியா திட்டம்

அணு ஆற்றல் மூலம் நாட்டின் மொத்த கார்பன் வெளியிட்டை 2030-ம் ஆண்டில் 40% ஆக குறைக்க தென்கொரியா திட்டமிட்டுள்ளது.

Update: 2022-11-25 21:18 GMT

சியோல்,

உலகின் பல நாடுகளைப் போலவே தென்கொரியா, பருவநிலை மாற்றத்தை சமாளிப்பதிலும், ஆற்றல் பாதுகாப்பை பராமரிப்பதிலும் கூடுதலாக கவனம் செலுத்தி வருகிறது. ஐரோப்பாவில் எரிசக்தி நெருக்கடி அதிகரித்து வருவதால், கார்பன் வெளியீட்டில் நிகர பூஜ்ஜியம் என்ற இலக்கை அடைய பிரான்ஸ் போன்ற நாடுகள் அணுசக்தி ஆற்றலின் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றன.

கார்பன் வெளியீடு காரணமாக ஏற்படும் மாசுபாட்டில் நடுநிலையை அடைய, அணுமின் நிலையங்களை பயன்படுத்த சர்வதேச நாடுகள் பரிசீலித்து வருகின்றன. சமீப காலமாக ஐரோப்பிய ஒன்றியமும் கார்பன் உமிழ்வை குறைக்க அணுமின் நிலையங்களின் பயன்பாட்டை நாடி வருகிறது.

இந்த நிலையில் கார்பன் உமிழ்வு விவகாரத்தில் தென் கொரியாவும் சர்வதேச போக்கையே பின்பற்றும் என்று அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் ஹான் ஜோவா ஜின் கூறியுள்ளார். மேலும் அணு ஆற்றல் மூலம் நாட்டின் மொத்த கார்பன் வெளியிட்டை 2030-ம் ஆண்டில் 40% ஆக குறைக்கவும், 2050-ம் ஆண்டில் நிகர பூஜ்ஜியத்தை அடையவும் தென் கொரியா திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்