ஷின்ஜோ அபே கொலை: சீன சமூக வலைதளங்களில் பரபரப்பு பதிவு
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே படுகொலைக்கு சீனா இரங்கல் தெரிவித்தது.;
பீஜிங்,
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே படுகொலைக்கு சீனா இரங்கல் தெரிவித்தது.இதுபற்றி சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜான் கருத்து தெரிவிக்கையில், "அபேயின் திடீர் மறைவால் சீனா அதிர்ச்சி அடைந்துள்ளது. சீன, ஜப்பான் உறவு மேம்பட அவர் பங்களிப்பு செய்துள்ளார்" என தெரிவித்தார். ஆனால் சீனாவுக்கு எதிராக ஜப்பானின் வலுவான கொள்கையை வடிவமைத்தவர் என ஷின்ஜோ அபேயை சீனர்கள் கருதுகின்றனர்.
இதனால் அவரது படுகொலையை சீனர்கள் கொண்டாடும் விதமாக சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிட்டு அதிர வைத்தனர். கொலையாளியை அவர்கள் ஹீரோ என வர்ணித்தனர். அபேவுக்கு இறப்பு வாழ்த்துகளை தெரிவித்தனர். "இது ஷாம்பைன் மது பாட்டிலுடன் கொண்டாட வேண்டிய ஒன்று" என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.